கும்பகோணம் தீவிபத்து - இழப்பீட்டை நிர்ணயிக்க ஒரு நபர் கமிஷன் - தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூட தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் சரஸ்வதி தொடக்க பள்ளி வளாகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 பள்ளிக்குழந்தைகள் பலியானார்கள். பலர் தீக்காயம் அடைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியது.

TN govt forms one man commission

இந்த இழப்பீடு போதாது என்று கூறி மேலும் இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பல தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் 19-10-2012 மற்றும் 22-4-2014 ஆகிய தேதிகளில் சில உத்தரவுகளை கூறியிருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை நிர்ணயிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்த கமிஷன் நிறைவு செய்து 4 மாதத்திற்குள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+