சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு- மவுனம் காக்கும் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் தமிழக அரசு மவுனம் காத்து வருவது ஆன்மீக வட்டாரத்தில் பெருத்த சந்தகேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீட்சிதர்களின் நிர்வாகத்தில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களையடுத்து, கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை ஏற்று நடத்த முடிவு செய்தது.

chidambaram Natarajar temple

இதன்படி 2009 ம் ஆண்டு கோவில் நிர்வாகத்தை கவனிப்பதற்காக தனி செயல் அலுவலரை அரசு நியமித்தது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், நடராஜர் கோவில் நிர்வாகத்தை அரசு மேற்கொள்வது சரியானது என்று கூறி, தீட்சிதர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகின்றது.

தீட்சிதர்கள் சார்பில் டாக்டர் சுப்பிரணியன் சுவாமி களத்தில் குதித்துள்ளார். ஆனால், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் யாரும் நியமிகப்படவில்லை. மாறாக, வட இந்திய ஜூனியர் வக்கில் யோகஸ் கண்ணாவை நியமித்து வாதாட செய்துள்ளது.இந்த நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் தீர்ப்பு தீட்சிதர்களுக்கு சாதகமாக வரும் நிலையில் உள்ளது. இது சிதம்பரம் கோவிலை மீட்கப் போராடி வரும் ஆன்மீகவாதிகளுக்கும், சிவ பக்தர்களுக்கும் பெரும் சந்தேகத்தையம், மனக் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+