For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிமகன்களே.. குவார்டருக்கு ரூ. 12 விர்.. ஃபுல்லுக்கு ரூ. 48 ஜிவ்.... லிஸ்ட்டைப் பாருங்க!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குவாட்டருக்கு ரூ. 12ம் முழு பாட்டிலுக்கு ரூ. 48ம் உயர்த்தப்பட்டுள்ளதால் 'குடி' மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மதுபானங்கள் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.3600 கோடி கூடுதலாக டாஸ்மாக்கிற்கு வருமானம் கிடைக்கும். மது விலை ஏற்றத்தினால், மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாயை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் மது விலையை உயர்த்துவது என அமைச்சரவை முடிவு செய்தது.

TN to increase prices of alcohol upto Rs 12 across the state

தமிழகத்தில் மதுபானங்கள் விலையை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அரசு உயர்த்தியது. பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட மதுபானங்களின் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குவார்ட்டருக்கு அதிகபட்சம் ரூ.12ம், புல் பாட்டிலுக்கு அதிக பட்சம் ரூ.48ம் அதிகரித்துள்ளது. விலை உயர்வை கேட்டு குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுபானங்களில் கோல்டன் க்ரேப் , ஓல்ட் மங்க் ரம், மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஆகியவவை ரூ. 352 ரூ.176 ரூ. 88
என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அவை முழு பாட்டில் ரூ. 400, ஆஃப் 200, குவாட்டர் ரூ.100 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல குவாட்டர், ஆஃப், முழு பாட்டில்களில் சில்லரை தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ரவுண்ட்டாக விலை உயர்த்தி விட்டனர்.

ஹனி பீ மீடியம் பிராந்தி, எம்சி டவல் மீடியம் பிராந்தி பிராண்டுகள் தற்போது ரூ. 440 ரூ. 220 ரூ. 110 ஆக விற்பனையாகிறது.

பிரீமியம் ரம், எம்சி டவல் க்ரீன் விஸ்கி ஆகியவை ரூ. 520 ரூ. 260 ரூ. 130 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்ச்சூரி விஸ்கி ரூ. 560 ரூ. 280 ரூ. 140 என்றும், கோல்டு பிராந்தி ரூ. 600 ரூ. 300 ரூ. 150 ஆக விற்பனையாகிறது.

பிரீமியம் விஸ்கி ரூ. 760, ரூ. 380 ரூ. 190 ஆக விற்பனையாகிறது. இதே போல அன்டிகியூட்டி புளூ
சூப்பர் பிரீமியம் விஸ்கி ரூ. 1120 ரூ.560 ரூ. 280 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பிராந்தி, வோட்கா, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டாலும், பீர் மற்றும் ஒயின் விலையை அரசு உயர்த்தவில்லை. இதனால், பீர், ஒயின் பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த விலை ஏற்றத்தினால் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு குறைந்தது ரூ.3ஆயிரத்து 600 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுப்படி சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது.
எனவே, சம்பள உயர்வால் ஏற்படும் நிதிநெருக்கடியை சமாளிக்க அரசு மது விலையை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

English summary
The government-owned Tamil Nadu State Marketing Corporation Ltd (Tasmac) is the only body authorised to sell alcohol in the state and it will levy an extra Rs 10 on beer and Rs 12 on hard drinks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X