"சக்தி" மயமாகும் தமிழக உள்ளாட்சி அமைப்புகள்...!
சென்னை: தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பெண்கள் மயமாக உள்ளது. வரும் உள்ளாட்சி்த் தேர்தலில் பாதிக்குப் பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுள்ளதால் தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அப்படியே அதிகரிக்கவுள்ளது.
தற்போது தமிழகத்தில் 1.32 லட்சம் உள்ளாட்சி பதவியிடங்கள் உள்ளன. இதில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தற்போது மூன்றில் ஒரு பங்கு இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதை மாற்றி 50 சதவீத இடங்கள் வரும் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கடந்த சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றியது என்பது நினைவிருக்கலாம். அந்த சட்டத் திருத்தம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வரவுள்ளது.
இதுதொடர்பான அறிவிக்கை கடந்த மே 23ம்தேதி மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடியால் வெளியிடப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு கடந்த பிப்ரவரி மாதமே ஆளுநர் ரோசய்யா ஒப்புதல் வழங்கி விட்டார்.
கடந்த 2011ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே நிர்ணயிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு இடத்தை விட கூடுதலான பெண்கள் பிரநிதித்துவம் பெற்றிருந்தனர் என்பதால் இந்த முறை பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் நிரம்பியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 10 மேயர்களில் 6 பேர் பெண்களாக இருந்தனர். 125 நகராட்சித் தலைவர்களில் 54 பேர் பெண்களாக இருந்தனர். அதேபோல பஞ்சாயத்து வார்டுகளிலும் பெண்களின் அளவு 41.97 சதவீதமாக இருந்தது. பஞ்சாயத்துத் தலைவர்களில் 39.28 சதவீதம் பேர் பெண்களாக இருந்தனர். வார்டு உறுப்பினர்களில் 39.28 சதவீதம் பேர் பெண்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு பெரிய அளவில் பிரதிநிதித்துவம் கிடைக்கவுள்ளது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications