தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வருவது உறுதி - பிரேமலதா விஜயகாந்த் ஆருடம்
தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வருவது உறுதி என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருப்பூர்: தமிழகத்தில் மாற்றத்திற்காக நேரம் உருவாகியுள்ளது. அதனால் விரைவில் பொதுத்தேர்தல் வருவது உறுதி என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆளும் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு அணியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி குற்றம்சாட்டி வருவதால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையி்ல் தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வருவது உறுதி என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருப்பூர் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், தே.மு.தி.க. அழிந்து விடும் என்று கனவு காண்கிறார்கள். கடைக்கோடி தொண்டன் இருக்கும் வரை எவராலும் நமது கட்சியை அசைக்க முடியாது.
நமது நாட்டில் விவசாயமும், தொழில்களும் சிறக்க வேண்டும். அதில் தான் நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது. டெல்லி விவசாயிகளுக்காக மண் சோறு சாப்பிட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் இணைந்து நாடகம் நடத்துகிறது.
திருப்பூரில் தொழில்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க. அரசால் இனி தமிழகத்துக்கு நல்லது நடக்கப்போவது இல்லை. தமிழகம் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 10 வருடங்களில் தமிழகம் பாலைவனமாகும். தே.மு.தி.க. கிடைத்துள்ள தோல்வி, சிறிய தோல்வி தான். யாரும் கலங்க வேண்டாம்.
அ.தி.மு.க. என்ற கட்சி பிளவு பட்டு கிடக்கிறது. இனி அந்த கட்சி இருக்கப்போவதில்லை. தமிழகத்தில் மாற்றத்திற்காக நேரம் உருவாகியுள்ளது. அதனால் விரைவில் பொதுத்தேர்தல் வருவது உறுதி. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications