அரசியலோடு விஷாலின் திரை வாழ்க்கையும் அஸ்தமிக்கும்... பொங்கி எழுந்த ராஜேந்திர பாலாஜி!

நடிகர் விஷாலின் அரசியல் வாழ்க்கையோடு திரை வாழ்க்கையும் அஸ்தமிக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் விஷாலின் அரசியல் வாழ்க்கையோடு திரை வாழ்க்கையும் அஸ்தமிக்கும், அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தட்டிக் கேட்பதாக நடிகர் சங்க தேர்தலில் களமிறங்கிய நடிகர் விஷால் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் போட்டியிட்டார். திரைத்துறையில் பெற்ற வெற்றிகளை ருசி பார்த்த விஷால் அடுத்தாக அரசியல் களமிறங்குகிறார்.

TN minister Rajendra Balaji says Actor Vishal will not get even deposit too

டிசம்பர் 21ல் நடைபெற உள்ள ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஷாலின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஷால் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல அல்ல என்று விமர்சித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கு நிச்சயம் ஆர்கே நகரில் டெபாசிட் கூட கிடைக்காது. அவரது அரசியல் கனவோடு திரை வாழ்க்கையும் அஸ்தமிக்கப் போகிறது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+