மே 12ல் ப்ளஸ் 2 ரிசல்ட் உறுதி - பெற்றோர்களுக்கு எஸ்எம்எஸ் - செங்கோட்டையன்

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 12ஆம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 12ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் மே 12ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த மாதமே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். தேர்வு முடிவுகளை மாணவர்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர்.

TN Plus 2 2017 results on May 12

இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 12ஆம் தேதி வெளியாகும் என்றார். 9 லட்சம் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இணையதளத்தில் வெளியாகும் தேர்வு முடிவுகள் பற்றி தாமதமோ, தடையோ இருக்காது. நீட் தேர்வுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்வதற்கு பயிற்சி அளிப்பது பற்றியும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+