காயிலே மில்லத் 120வது பிறந்தநாள்: மலர்ப் போர்வை போர்த்தி வைகோ, ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: காயிதேமில்லத்தின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர். திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5.6.1896-ல் பிறந்தவர். அவரது 120வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள திருவல்லிக்கேணி மசூதியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கோகுலஇந்திரா, பா.வளர்மதி, மேயர் சைதை. துரைசாமி ஆகியோர் மலர்போர்வை போர்த்தி மரியாதை செய்தனர்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிர்வாகிகள் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள். தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், கு.க.செல்வம், தாயகம் கவி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, பகுதி செயலாளர்கள் மதன்மோகன், மா.பா.அன்புதுரை, காமராஜ், அகஸ்டின்பாபு, மயிலை வேலு, சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான், பொதுக்குழு உறுப்பினர் வி.பி.மணி, சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் சிதம்பரம், ரகமத்துல்லா, காரம்பாக்கம் கணபதி, ஆலப்பாக்கம் சண்முகம் கலந்து கொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் அஞ்சலி செலுத்தினார். இதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார், எஸ்.எம்.இதயத்துல்லா, மாவட்ட தலைவர்கள் சிவராமன், ரங்கபாஷ்யம், நிர்வாகிகள் தணிகாசலம், அசன் ஆரூண், நவாஸ் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மாவட்டச்செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், பாலவாக்கம் சோமு, ஜீவன், பூவை கந்தன், பா.ம.க. முன்னாள் எம்.பி., ஏ.கே.மூர்த்தி, மண்டல தலைவர் ஜெயராமன் ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிர்வாகிகள் சைதை பாலாஜி, செல்லத்துரை,தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், பொருளாளர் அக்ரம்கான் உள்ளிட்ட ஏராளமான பேர் காயிதேமில்லத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications