காயிதே மில்லத்தின் 123வது பிறந்த நாள்: முதல்வர் பழனிசாமி மலர் போர்வை போர்த்தி மரியாதை
காயிதே மில்லத்தின் 123வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video

சென்னை: காயிதேமில்லத்தின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர். திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5.6.1896-ல் பிறந்தவர்.

காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்தார். அனைத்து கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக பாராட்டப்பட்டவர்.
1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு சென்று பணியாற்றினார். 1967ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.
அரசியலில் மட்டும் இன்றி தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். அவரது 123வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.
காயிதேமில்லத்தின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் வாலாஜா மசூதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications