ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க இயலாது- தமிழக அரசு கொண்டுவரலாம்- நிர்மலா சீதாராமன்
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க இயலாது; ஆனால் தமிழக அரசு அவசர சட்டத்தைக் கொண்டுவரலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

இதேகோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இதனிடையே சென்னையில் தந்தி தொலைக்காட்சி செய்தியாளருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் மத்திய அரசால் எந்த ஒரு அவசர சட்டமும் கொண்டுவர முடியாது. ஆனால் மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவர முடியும்.
அப்படி தமிழக அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்தால் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications