பனி விலகப் போகுது.. வெயில் வெளுக்கப் போகுது.. ரெடியாகுங்க மக்களே!
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இருந்து வரும் பனிச் சூழல் விரைவில் விலகி வெயில் கொளுத்தப் போகிறது. இந்த முறை அதிக அளவிலான வெயிலை சந்திக்க வேண்டியிருக்கலாம் என்று வானிலை மையமும் கூறியுள்ளது.
தமிழகத்தில் தற்போது பனிக்காலம் இன்னும் விலகாமல் உள்ளது. தொடர் பனி காரணமாகவும், அதிக அளவில் இந்த முறை பனி இருந்ததன் காரணமாகவும் சளி, காய்ச்சல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகமாகவே உள்ளன.
ஆனால் இனி வெயில் வரப் போவதாக வானில மையம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இனி் வறண்ட வானிலை அதிகரிக்கும் என்றும் வெயில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குளிர்காலம் முடிகிறது
குளிர்காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. எனவே அடுத்து வெயில் காலம் தொடங்கி விடும். படிப்படியாக வெயிலின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் வெயில்
இந்த முறை வெயிலும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பனி அதிகம் இருந்தால் அடுத்து வரும் வெயிலும் கடுமையாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

போகப் போகத்தான் தெரியும்
ஆனால் பல நேரங்களில் இயற்கை தன் இஷ்டத்திற்குத்தான் நின்று விளையாடும். எனவே இந்த முறை வெயில் மண்டையைப் பிளக்குமா அல்லது மனதை குளுமையாக்கும் வகையில் குறைவாக இருக்குமா என்பதை போகப் போகத்தான் தெரியும்.

வறட்சி அதிகமாக இருக்கலாம்
தற்போதைக்கு மக்களை வாட்டி வரும் பனி மெல்ல விலகி வெயில் அதிகரிக்கும் என்பது மக்களுக்கு சற்று ஆறுதலான விஷயம்தான். அதேசமயம், இந்த முறை மழைக்காலம் சரியாக இல்லாமல், மழை பற்றாக்குறையாகவே பெய்து விட்டுப் போயுள்ளதால் வெயில் காலத்தில் கடும் வறட்சியை சந்திக்க வேண்டியிருக்குமே என்ற அச்சமும் மக்களை வாட்டாமல் இல்லை.
மேலும் வெயில் குறித்த விவரங்களுக்கு
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications