காவிரி மேலாண்மை வாரியத்திற்காக முழுஅடைப்பு... தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருச்சி, மதுரை, திருவாரூர் என மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பல கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள் மத்திய அரசு காவிரி வாரியத்தை அமைக்கவில்லை. மாறாக தீர்ப்புக்கு விளக்கமும், மேலும் 3 மாதம் கால அவகாசம் கோரியும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று திமுக தனது தோழமைக் கட்சிகளுக்கு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.
திமுகவின் இந்த மழு அடைப்பிற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பில் சுமார் 70 ஆயிரம் கடைகள் பங்கேற்றுள்ளதால் ரூ. 5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டுள்ளன.

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் பாத்திரக் கடைத் தொழிலார்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளதால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி நகரமான ஈரோட்டிலும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்பில் ஈடுபட்டுள்ளனர் சுமார் 30 சதவீத ஜவுளி மற்றும் பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் முழு அடைப்பில் ஈடுபட்டுள்ளன.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications