விடாது கொட்டும் அடைமழையால் அவதி: சென்னை, புறநகர் பகுதிகள் மூழ்கின- மின்சாரம் துண்டிப்பு
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரமாக விடாமல் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக திரும்பும் திசை எல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளித்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போயுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ளநீரில் விஷ ஜந்துக்களும், பாம்புகளும் படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையினால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

24 மணிநேரம் கொட்டிய மழை
இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரையிலும் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய, விடிய பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகியது.

குளமாக மாறிய சாலைகள்
தொடர் மழையால் நகரின் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

பெருக்கெடுத்த வெள்ளம்
கோயம்பேடு, அமைந்தகரை, வடபழனி, தியாகராயநகர், கே.கே.நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கொரட்டூர், அண்ணாநகர், திருமங்கலம், கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை நீர் வடிய இடமின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

மூழ்கிய குடியிருப்புகள்
கடந்த திங்கட்கிழமை முதலே சென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார் பேட்டை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதேபோல வில்லிவாக்கம், மடிப்பாக்கம்,
வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், சென்னையின் புறநகர் பகுதிகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. கொரட்டூர் டி.வி.எஸ். நகர் பகுதிகளில் வீடுகள், வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள வினாயகர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.

முழங்கால் அளவு தண்ணீர்
கொரட்டூர் சென்டிரல் அவென்யூ சாலையில் டிரான்ஸ்பார்மரை சுற்றி முட்டளவுக்கு மழை நீர் தேங்கி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மழைநீருடன் கழிவுநீர்
பழைய வண்ணாரப்பேட்டை பரசுராமன் தெரு, சஜ்ஜூ முனுசாமி தெரு, கொரட்டூர் சென்டிரல் அவென்யூ, ஐஸ் அவுஸ், அண்ணாநகர், திருமங்கலம், புரசைவாக்கம் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. சில இடங்களில் கழிவு நீர், மழை நீரோடு கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனை பொதுமக்கள் கடும் சிரமத்துடன் வெளியேற்றினர்.

மாணவர்கள் அவதி
கீழ்ப்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்திலும் மழை நீர் குளம்போல் தேங்கியது. மாணவர்கள் விடுதி வளாகத்தின் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் கடும் சிரமம் அடைந்தனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் வெளியே வராமல் விடுதியிலேயே முடங்கினர்.

மூழ்கிய சுரங்கப்பாதைகள்
சேத்துப்பட்டு சுரங்கப்பாதை, கத்திப்பாரா சுரங்கப்பாதை, பரங்கிமலை சுரங்கப்பாதை, ஜீவா சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை உள்பட பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதைகளில் முட்டளவுக்கு மழை நீர் தேங்கியது. ஜீவா சுரங்கப்பாதை, பரங்கிமலை சுரங்கப்பாதை உள்பட சில சுரங்கப்பாதைகள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு
பெரும்பாலான வழித்தடங்களில் மழை நீர் தேங்கியதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில பேருந்துகளின் கூரை வழியாக மழை நீர் உள்ளே புகுந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். சில இடங்களில் பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் பழுதாகி நிற்கின்றன.

இயல்பு வாழ்க்கை முடக்கம்
விடாது கொட்டி வரும் கனமழையால் சென்னை நகரிலும், புறநகரிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. சென்னை நகரிலும் புறநகர் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாம்புகளும், விஷ ஜந்துகளும் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளால் மழை, வெள்ளத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications