முதல்வரைத்தான் மாற்ற வலியுறுத்தினோம்- கட்சி தாவவில்லை: தினகரன் தரப்பு வக்கீல் துஷ்யந்த் தவே
முதல்வரைத்தான் மாற்ற வலியுறுத்தினோம், நாங்கள் கட்சித்தாவவில்லை என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டுள்ளார்.
சென்னை: பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தோம். ஊழல் மிகுந்த அரசாக மாறியதால் ஆதரவை வாபஸ் பெற்றோம் என்று துஷ்யந்த் தவே வாதிட்டு வருகிறார்.
முதல்வரை நீக்கத்தான் வலியுறுத்தினோமே தவிர நாங்கள் கட்சித்தாவவில்லை என்றும் துஷ்யந்த் தவே வாதிட்டுள்ளார்.
தகுதி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணை தொடங்கியது.
கபில் சிபில், சல்மான் குர்ஷித், ராகேஷ் திரிவேதி, அரிமா சுந்தரம், துஷ்யந்த் தவே போன்ற நாடறிந்த சீனியர் வழக்கறிஞர்கள் இந்த வழக்குகளில் வாதி, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகி வாதிட்டு வருகின்றனர்.

துஷ்யந்த் தவே வாதம்
டிடிவி தினகரன் தரப்பில் வாதிட்ட துஷ்யந்த் தவே, சபாநாயகரின் நடவடிக்கை தவறானது. எடியூரப்பா வழக்கின் தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை. பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தோம். ஊழல் மிகுந்த அரசாக மாறியதால் ஆதரவை வாபஸ் பெற்றோம் என்றும் வாதிட்டார்.

ஓபிஎஸ் மீது நடவடிக்கையில்லை
எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீசெல்வம் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் முதல்வர் பழனிசாமி அரசின் மீது ஓ.பி.எஸ். ஊழல் புகார் கூறியிருந்தார் என்றும் துஷ்யந்த் தவே வாதிட்டார்.

அதிகார துஷ்பிரயோகம்
எடப்பாடி அரசு ஊழல் செய்வதால்தான் எதிர்ப்பு தெரிவித்தோம். கட்சித் தாவல் தடை சட்டத்தை சபாநாயகர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். ஊழலை மறைக்க அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

உட்கட்சி ஜனநாயகம்
அதிருப்தியை வெளிப்படுத்தும் உரிமை எம்.எல்.ஏக்களுக்கு இருக்கிறது. உட்கட்சி ஜனநாயகத்தை கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் தவே தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

சபாநாயகர் கட்சிக்காரரா?
18 பேரை அவசரமாக நீக்கி அரசிதழில் வெளியிட்டுள்ளனர். சபாநாயகர் கட்சிக்காரர் போல செயல்படுகிறார். சபாநாயகர் உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. சபாநாயகர் உத்தரவுகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டதே.

பெரும்பான்மை இல்லை
பெரும்பான்மை இல்லாததால் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 18 பேரை அவசரமாக நீக்கி அரசிதழில் வெளியிட்டுள்ளனர் என்றும் தவே வாதிட்டார். சபாநாயகர் தனபாலின் உத்தரவு இயற்கை நீதிக்கு முரணானது

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்
சபாநாயகர் கட்சிக்காரர் போல செயல்படுகிறார். சபாநாயகர் உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. சபாநாயகர் உத்தரவுகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டதே என்றும் துஷ்யந்த் தவே தனது வாதத்தை முன்வைத்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications