ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால், போராட்டக் களத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், நானே போராட்டத்தில் குதிப்பேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுபற்றி கூறியுள்ளதாவது: தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இந்த மண்ணின் மைந்தர்களின் உணர்வையும் பெருமைகளையும் வெளிப்படுத்தும் விளையாட்டு. அப்படிப்பட்ட வீர விளையாட்டிற்கு ஆபத்து வந்த போது அதற்கென்று, "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் 2009" என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, அதில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தியதுதான் கழக அரசு.

ஆனால் 2011ல் அதிமுக அரசு அமைந்ததும், பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியது போல் தமிழர்களின் இந்த பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுவிற்கும் தடங்கலை ஏற்படுத்தியது அதிமுக அரசு. இதை ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமே 7.5.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தீர்ப்பினை அளித்த உச்சநீதிமன்ற நீதியரசர் ராதாகிருஷ்ணன் அவர்கள், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி பாதுகாப்புடன் நடக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய விலங்கு வாரிய அதிகாரிகள் இருவரை அனுப்பினோம். டாக்டர் மணிலால் வல்லியேட், அபிசேக் ராஜே ஆகியோர் அடங்கிய குழுவினர் 14.1.2013 அன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டையும், 15.1.2013 அன்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டையும்,16.1.2013 அன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டையும் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்தார்கள்.
அந்த அறிக்கையை படித்துப் பார்த்தோம். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டப்படி உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காமல் ஜல்லிக்கட்டை அந்த மாவட்ட ஆட்சித் தலைவரும், போலீஸ் அதிகாரிகளும் நடத்தியுள்ளார்கள் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அன்றைய தினம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்படுகளுடன் விளையாட்டு நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வந்த போது அதிமுக அரசுதான் இருந்தது. அந்த அரசுதான் இப்போதும் இருக்கிறது.
தி.மு.க. அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டப்படி அதிமுக ஆட்சியில் இந்த விளையாட்டை நடத்தியிருந்தால் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்காது. ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடுக்க வேண்டும் என்ற தீயநோக்கத்துடன் செயல்பட்ட அதிமுக அரசின் அலட்சியமே இன்றைக்கு ஜல்லிக்கட்டு தடை பட முக்கியக் காரணம். இன்றைக்கு 49 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுக அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டை துவக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த செப்டம்பர் மாதத்தில் "நமக்கு நாமே" பயணம் சென்ற நான், "ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நானே வந்து போராடுவேன்" என்று அலங்காநல்லூர் மக்களிடத்தில் உறுதிமொழி அளித்து விட்டு வந்தேன்.
வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குள்ள தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைவர் கலைஞரின் அனுமதி பெற்று நானே தலைமை தாங்கி போராட்டம் நடத்துவேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications