இன்னும் பேசிக்கிட்டேதான் இருக்கார் மோடி, செயலைக் காணோம்.. ஞானதேசிகன்
தூத்துக்குடி: 100 நாள் மோடி அரசு தேர்தல் பிரச்சாரத்தின் விரிவாக்கமாகவே உள்ளது. பிரச்சாரத்தின்போது பேசியதுபோல் தற்போதும் பேசி கொண்டே இருக்கிறார் நரேந்திர மோடி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கப்தற்காக தூத்துக்குடி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் தூத்துக்குடி வந்தனர்.

பாஜக எதையும் செய்யவில்லை
அங்கு செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் பேசுகையல், மீனவர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசுதான் மீனவர்கள் மற்றும் இலங்கை அரசுடன் கூட்டுபேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வந்ததது. ஆனால் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி பொறுப்பேற்றால் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும் எனத் தெரிவித்தனர் ஆனால் தற்போது மீனவர்களை விடுதலை செய்யப்படுகிறார்களே தவிர அவர்களது படகுகளை விடுவிக்கவில்லை.

சாமி கருத்து பாஜக கருத்தா, இல்லையா..
தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணியம் சாமியின் கருத்து பாரதீய ஜனதாவின் கருத்தா என்பது குறித்து பாரதீய ஜனதாவின் தலைமை தெளிவுப்படுத்தவேண்டும்.

குடிப்பவர் பெருகி விட்டனர்.. குற்றமும் அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போது குற்றங்கள் பெருகியுள்ளது. மது குடிப்போர் அதிகரித்துள்ளனர்.

காசு இல்லை போட்டியிடவில்லை
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பணபலம் இல்லாததால் போட்டியிடவில்லை.

ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமே இல்லையே
மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு 100நாள் தேர்தல் பிரச்சாரத்தின் விரிவாக்கமாக உள்ளது. தற்போதும் பிரச்சாரத்தில் பேசியது போலவே பேசிகொண்டே இருக்கிறார்கள். பாரதீய ஜனதா இன்னும் ஆட்சி செய்யவே ஆரம்பிக்கவில்லை. பாஜகவின் 100நாள் ஆட்சியில் ஆட்சி மாற்றத்திற்கான எந்த அடையாளமும் இல்லை என்றார் அவர்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications