மீண்டும் தென்காசியில் வெடித்த சர்ச்சை.. குரூப் 4 தேர்வில் முறைகேடா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
தென்காசி: சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தென்காசியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளது புகார்கள் வரவில்லை என்றும் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் 9 மாதங்களாக வெளியாகமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு குரூப் 4 அரசுப் பணிகளுக்கு கூடுதலாகப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன.
இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்கான மொத்த பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அதேபோல சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,024-ல் இருந்து 1176 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே குரூப்-4 தேர்வு முடிவுகள குறித்து சர்ச்சை எழுந்தது. நன்றாக படித்தவர்களுக்கு சரியான மதிப்பெண் அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. அதே போல் குரூப் 4 தேர்வில் ஒரே குறிப்பிட்ட மையத்தில் இருந்து மட்டும் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றதால் சர்ச்சை எழுந்தது. தென்காசி மற்றும் காரைக்குடி பகுதியில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் தென்காசியை சுற்றியே அடிக்கடி புகார்கள் எழுவதால் பரபரப்பு எழுந்துள்ளது. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவுதேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. 2500 ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலிப்பணியிடங்களில், 600க்கும் மேல் தென்காசி மாவட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்இ குறிப்பாக 450 பேர் சங்கர் கோயில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து தேர்வாகி உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

முன்னதாக தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார் என்றும் கடந்த முறை சர்ச்சை எழுந்த போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் சங்கரன்கோவில் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவு தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து விளக்கம் அளித்த டிஎன்பிஎஸ்சி, முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது. தென்காசியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளது புகார்கள் வரவில்லை என்றும் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. எவ்வித முகாந்திரமும் இல்லாமல் முறைகேடு என்ற முடிவுக்கு வருவது தவறு என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications