டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு: தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டி ராமநாதபுரத்தில் அதிரடி கைது
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறைகேடுகள் தொடர்பாக தலைமறைவாக ஆயுதப் படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பிற தேர்வுகளிலும் ஏராளமான முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக பலரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடுகள் மூலம் தமது குடும்பத்தினர் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கும் ஆயுதப் படை காவலர் சித்தாண்டி வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சித்தாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரை சேர்ந்த சித்தாண்டியும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகினர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் பதுங்கி இருந்த சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர். சித்தாண்டி சிக்கியிருப்பதன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் எப்படியெல்லாம் நடந்தன என்பது வெட்ட வெளிச்சமாகும் என தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications