தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: 15 சிறப்பு டிக்கெட் கவுன்ட்டர்கள் திறப்பு!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், தீபாவளிக்கு அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
இவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் 8,350 சிறப்பு பஸ்களை இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.

இன்று முதல் சிறப்புப் பேருந்துகள்
இந்த சிறப்பு பேருந்துகள் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோயம்பேட்டில் 15 கவுண்ட்டர்கள்
பயணிகளின் நலன் கருதி சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 15 சிறப்பு கவுன்ட்டர்களை போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை திறந்து வைத்தார்.

முறையாக பயன்படுத்துங்கள்
இந்த கவுன்ட்டர்களை பயணிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி,மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை உட்பட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மறுமார்க்கத்திலும் சிறப்புப் பேருந்துகள்
அதேபோல் மறுமார்க்கத்தில் அந்தந்த ஊர்களிலிருந்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான பேர் பயனடைவார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications