ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ஆடிக்கிருத்திகை தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆடி மாதம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள், கூழ் வார்க்கும் நிகழ்ச்சிகள் நடக்கும்.

Today is a holiday for schools and colleges in Ranipet district due to Adikrittika

இந்நிலையில் தான் ஆடிக்கிருத்திகை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது முருகனுக்கு உகந்த நாளாகும். இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல முருகன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

ஆடிக்கிருத்திகை தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள முருகன் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று தரிசனம் மேற்கொள்வார்கள். இதனால் உள்ளூர் மக்களும் செல்லும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+