மக்களே.. வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. நாளை முதல் அபராதமாம்!
வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.
சென்னை: வருமான வரித்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமானவரிச் சட்டத்தின் கீழ், தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.
வருமானவரி கணக்கை இன்று தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மேலும் வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும் என, வருமான வரித்துறை கண்டித்துள்ளது.
இன்று கட்டாதவர்களில், 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்போர், ரூ. 1,000 தாமத கட்டணமும், மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
இதனை அடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 31ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
முன்னதாக அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம் எனவும் வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றுடன் வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்வது நிறைவடைய உள்ளது. இன்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்து அபராதத்தினை தவிர்க்குமாறு வருமான வரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications