இன்றும் காமராஜர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது! அப்பழுக்கற்ற தலைவர்! -கே.என்.நேரு
திருச்சி: காமராஜர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட, இன்றைக்கும் அவர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டுக் கேட்க முடியாது என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார்.
முதலமைச்சராக இருந்தும் அவர் மீது யாரும் எந்தக் குற்றச்சாட்டும் முன் வைக்க முடியாதபடி வாழ்ந்து மறைந்த அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர் என அமைச்சர் நேரு தெரிவித்தார். பதவிக்காலம் முழுவதும் யாராலும் குற்றஞ்சாட்ட முடியாத வகையில் ஆட்சி நடத்தியவர் காமராஜர் என கூறியிருக்கிறார்.

காமராஜர் பெயரைச் சொல்லாமல் ஓட்டுக் கேட்க முடியாத நிலை இருப்பதாக முதலில் கூறிய அமைச்சர் நேரு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை பிறகு அந்த லிஸ்டில் பெரியார், அண்ணாவையும் சேர்த்துக் கொண்டார்.
காமராஜரின் கடைசிக்காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அவரிடம் ஆலோசனை கேட்டு செயல்பட்டார் என நேரு தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்தவரை காமராஜரின் பிறந்தநாள் விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை அடுத்தக்கட்டத்துக்கு வளர்த்தெடுத்த தலைவர்களில் காமராஜர் பிரதானமானவர் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் கே.என்.நேரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது தந்தை நாராயணன் காங்கிரஸ் அபிமானி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் ஜவஹர்லால் நேரு நினைவாக மகனுக்கு நேரு என பெயர் சூட்டினார் நாராயணன்.
காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நேரு, ஒரு கட்டத்தில் சொந்த விருப்பத்தின் பேரில் திமுகவில் இணைந்தவர் என்பது திரும்பிப் பார்க்கத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications