சுங்கச் சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: சுங்கச் சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (31.3.2016) நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் நுழைவுக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சரக்கு வாகன வாடகை உயர்வதோடு, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 350-க்கும் அதிகமான நெடுஞ்சாலைகள் உள்ளன. அதில் தமிழகத்தில் 44 சாவடிகள் உள்ளன. அதில் 26 சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்தும், 18 சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்தும் சுங்கக் கட்டணத்தை உயர்வது நடைமுறையில் உள்ளது.
அதன்படி திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தூத்துக்குடி, வேலூர், நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் 12 சதவீத கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
சுங்கக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி கடந்த அக்டோபரில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு, படிப்படியாக சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது லாரி உரிமையாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுங்கச் சாவடிகளை நடத்தும் தனியார் நிறுவனங்கள் சாலை பராமரிப்பு பணிகளை எதையும் செய்யாமல் அதன் பயனை அனுபவித்து வருகின்றனர்.
நடுத்தர மக்கள், வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது வேண்டாத வேலையாகும். எனவே, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications