கோவையில் தக்காளி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசம்... தக்காளி விலை கடும் உயர்வு
கோவை: தொடர் மழை காரணமாக தாக்காளி பயிர்கள் நீரில் மூழ்கியதால் கோவையில் தக்காளி விலை திடீரென உயர்ந்து கிலோ ரூ.46-க்கு விற்பனையாகிறது.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பேரூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி விலை திடீரென்று உயர்ந்துள்ளது. இதன்படி நாட்டு தக்காளி கிலோ ரூ.36 முதல் ரூ.44 வரையிலும், ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.36 முதல் ரூ.46 வரையிலும் விற்பனையாகிறது.

இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது, அதன் விவரம் வருமாறு:
கத்தரிக்காய் கிலோ ரூ.15 முதல் ரூ.24 வரையிலும், வெண்டைக்காய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், புடலை கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், அவரைக்காய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், பீர்க்கன்காய் கிலோ ரூ.30 முதல் 40 வரையிலும், சுரைக்காய் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரையிலும் விற்பனையானது.
பூசணிக்காய் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், அரசாணிக்காய் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், மேரைக்காய் கிலோ ரூ.20-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 முதல் ரூ.44 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இஞ்சி கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.24 வரையிலும், சேனைக்கிழங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.24 வரையிலும், முள்ளங்கி கிலோ ரூ.20 முதல் ரூ.24 வரையிலும், கேரட் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், பீட்ரூட் கிலோ ரூ.40 முதல் ரூ.52 வரையிலும், முட்டை கோஸ் கிலோ ரூ.12 முதல் ரூ.20 வரையிலும், காலிபிளவர் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், குடை மிளகாய் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரையிலும், பஜ்ஜி மிளகாய் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனையானது.
தக்காளி விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. தாகாளி செடிகள் மழை நீரில் மூழ்கியதால் உற்பத்தி செய்த பெரும்பாலான தக்காளிகள் அழுகி நாசமாகிவிட்டன. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது‘ என்றார்.












Click it and Unblock the Notifications