கனமழை... சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை
சென்னை: விட்டு விட்டு கனமழை பெய்துவருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீர் வடியாமல் மக்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. சாலைகளில் குளம்போல தேங்கியுள்ள வெள்ளநீரினால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

குமரி கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் காலையில் வெயில் அடித்த நிலையில் பிற்பகல் 3 மணியில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், பகுதிகளில் ஒரு மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது. வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வடபழனி, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி வடியாமல் உள்ளநிலையில் விட்டு விட்டு கனமழை பெய்துவருவதால் சென்னைவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கனமழை பெய்து வருவதால் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் முதல் விடாமல் கனமழை கொட்டி வருவதால் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications