குடியிருப்பில் புகுந்த சிறுத்தை.. திருப்பத்தூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. மக்களே உஷார்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை பெயிண்ட் அடித்த தொழிலாளியை தாக்கிவிட்டு குடியிருப்புக்குள் நுழைந்து கார்பார்க்கிங்கில் பதுங்கி உள்ளது. இந்த சிறுத்தை இன்னும் பிடிபடாத நிலையில் திருப்பத்தூர் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் இன்று மாலையில் பள்ளியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் திருப்பத்தூரை சேர்ந்த 55 வயது நிரம்பிய கோபால் என்பவர் ஈடுபட்டு வந்தார்.
அப்போது திடீரென்று அங்கு சென்ற சிறுத்தை கோபாலை தாக்கியது. அவர் அலறி துடித்தார். இதற்கிடையே சிறுத்தை அங்கிருந்து அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து கார் பார்க்கிங்குள் நுழைந்தது. இந்த தாக்குதலில் கோபால் தலையில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே கார் பார்க்கிங்கில் சிறுத்தை பதுங்கிய நிலையில் பள்ளியில் இருந்த மாணவிகள் அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், வனத்துறையினர் விரைந்து வந்தனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் நடைமுறை பற்றி அவர்களிடம் விளக்கி கூறினர்.
இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒலிபெருக்கியில் சிறுத்தை நடமாட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டது. அதோடு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. இதற்கிடையே தான் கார் பார்க்கிங்கில் பதுங்கிய சிறுத்தை இன்னும் பிடிபடவில்லை. சிறுத்தையை மயக்கஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் மாணவ-மாணவிகளின் நலன் கருதி திருப்பத்தூர் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சிறுத்தை சிக்காமல் இருப்பதாலும், சிறுத்தையை பிடிக்க முயலும்போது ஒருவேளை அது தப்பித்துவிடலாம் என்பதாலும் முன்னெச்சரிக்கையாக இந்த விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications