குற்றாலம் பேரரருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
குற்றாலம்: குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவியில் சனிக்கிழமை இரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி முதலாவது நடைபாதையை தொட்டுக்கொண்டு தண்ணீர் சீறிப் பாய்ந்தது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டியது. இதையடுத்து அருவிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அருவிகளில் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து பேரருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை நீக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் பலத்த மழை பெய்தது.
இதனால் பேரருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பேரருவியில் பொதுமக்கள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினங்களை குற்றாலத்தில் கழிப்பதற்காக வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications