என்ஜாய்.. குற்றால அருவிகளில் கொட்டுகிறது தண்ணீர்... சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தென்காசி: குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக, காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிப்பட்ட நிலையில், மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் வெள்ளமாக கொட்டத் தொடங்கியுள்ளது.
ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வார முறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை குறைந்தபின் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பெய்த மழையினால் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் திரண்டு வந்து ஆனந்தமாக அருவிகளில் குளித்து செல்கின்றனர்.
இதனிடையே, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications