ஒகனேக்கலில் ஓஹோன்னு கூட்டம்.. குளிக்கத்தான்.. 2 மாத தடை நீங்கியதால் உற்சாகம்!
86 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் குளிக்க அருவியில் அனுமதி வழங்கப்பட்டது.
தருமபுரி: 86 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து கூட்டம் நிரம்பி வருகிறது.

அனுமதி மறுப்பு
கனமழை, வெள்ளம், கடும் காற்று என இரண்டு மாதங்களாகவே இயற்கை சீற்றம் தமிழகத்தில் காணப்பட்டு வந்தது. இதனால் முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் தடை
கர்நாடக மாநில மழை காரணமாகவும் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் வெள்ளம் காரணமாகவும் நீண்ட நாள்கள் தடை போடப்பட்டது. ஏனென்றால் இங்கு பெருக்கெடுத்த வெள்ளம் பாறைகளை அனைத்தையும் மூழ்கி ஓடிக் கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் தவித்தனர்.

86 நாட்கள்
பிறகு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்ப ஆரம்பித்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. இரண்டு வாரங்கள் இந்த பராமரிப்பு முடிந்த பிறகு தற்போது அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 86 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி என்பதால் ஆர்வத்துடன் ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் காலாண்டு விடுமுறையில் சனி-ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் தலை அதிகமாகவே காணப்பட்டது.

களை கட்டும் அருவி
சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தார்கள். இது மட்டும் அல்லாமல் தொங்கு பாலமும் திறக்கப்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துவிட்டதால், அதிலும் நின்று கொண்டு மக்கள் ரசித்தவாறே சென்றனர். பரிசில் இயக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அருவியில் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு விட்டதால், ஒகனேக்கல் களை கட்டி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications