இந்துத்துவா அமைப்பினர் திருமணம் செய்து வைத்த நாய்க்கும் ஆட்டுக்கும் விவாகரத்து கேட்டு பரபர மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாய்க்கும் ஆட்டுக்கும் விவாகரத்து கேட்டு பரபர மனு! | Oneindia Tamil

  கோயம்புத்தூர் : காதலர் தினத்தை முன்னிட்டு இந்துத்துவா அமைப்பினர் திருமணம் செய்து வைத்த நாய்க்கும் ஆட்டுக்கும் விவகாரத்து கேட்டு கோவை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞரிடம் பரபர மனு அளிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்த மனுவை வக்கீலிடம் தந்துள்ளனர்.

  உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினம் கலாச்சார சீரழிவு என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இந்துத்துவா அமைப்பினர் காதலர் தின எதிர்ப்பு விஷயங்களை அரங்கேற்றினர்.

  பூங்காக்கள், சுற்றுலாத் தளங்களில் ஜோடியாக சுற்றியவர்களை சுற்றி வளைத்து இப்போதே தாலி கட்ட வேண்டும் என்று கெடுபிடி காட்டினர். இருசக்கர வாகனங்களில் ஜோடியாக சுற்றியவர்களையும் வழி மறித்து ரகளை செய்துள்ளனர்.

  விலங்குகளுக்கு நடத்தி வைத்த கல்யாணம்

  விலங்குகளுக்கு நடத்தி வைத்த கல்யாணம்

  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவா அமைப்பினர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் காதலர் தின எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாகவும் விலங்குகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கூத்துகளையும் நடத்தினர். மேள தாளத்துடன் நாய்க்கும், கழுதைக்கும் திருமணம், செய்வது நாய்க்கும் - ஆட்டுக்கும் திருமணம் செய்வது என்று நேற்று காதலர் தின எதிர்ப்பு களேபரங்கள் அரங்கேறின.

  த.பெ.தி.க பதிலடி

  த.பெ.தி.க பதிலடி

  இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காதலர் தினத்தில் அரங்கேறிய நாடகங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை சந்தித்து இந்துத்துவா அமைப்பினரால் திருமணம் செய்து வைத்த விலங்குகளுக்கு விவாகரத்து கேட்டு மனு அளித்துள்ளனர்.

  தாலி மாலையுடன் வந்த ஆடு

  தாலி மாலையுடன் வந்த ஆடு

  தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு. ராமகிருஷ்ணன் இந்த மனுவை அளித்துள்ளார். த.பெ.தி.கவினர் நாய்க்கும், ஆட்டுக்கும் கழுத்தில் மாலை போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

  விவாகரத்து வாங்கித் தாருங்கள்

  காதலர் தினத்தில் நாய்க்கும் ஆட்டுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திருமணம் செய்து வைத்துவிட்டனர். இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் டிவைர்ஸ் வாங்கித் தருமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TPDK activists bring Dog and Goat to Coimbatore Court seeking divorce stating the animals were made to marry by Saffron extremists yesterday on valentines day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற