அங்கிட்டு ராமர், சீதை படங்கள்... இங்கிட்டு பெரியார் படம் எரிப்பு- சென்னையில் பரபரப்பு!
சென்னை: வட இந்தியாவில் ராமலீலா என்ற பெயரில் ராவணன் உருவபொம்மைகள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தந்தை பெரியார் தி.க. ராவணலீலா என்ற பெயரில் ராமர், சீதை உருவங்களை எரித்தனர். இதற்கு போட்டியாக தந்தை பெரியார் உருவப் படத்தை இந்து மக்கள் கட்சியினர் எரித்தனர்.
ராமலீலா என்ற ராவணன் உள்ளிட்டோரின் உருவபொம்மைகளை வட இந்தியர்கள் எரித்து கொண்டாடுவர். இதற்கு பெரியாரிய இயக்கங்கள் பல ஆண்டுகாலம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த ஆண்டு ராமலீலாவுக்கு எதிராக சென்னையில் ராவணலீலா நடத்துவோம் என கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் தி.க. அறிவித்து இருந்தது. இதற்கு இந்துமக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் நேற்று ராமர், சீதை, லட்சுமணன் உருவபொம்மைகளை எரித்து ராவணலீலா போராட்டத்தை பெரியார் தி.க.வினர் நடத்தினர். அதே நேரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன்பாக தந்தை பெரியார் உருவபடத்தை இந்து மக்கள் கட்சியினர் எரித்தனர்.

போட்டி போட்டு இரு இயக்கங்களும் உருவபொம்மைகளை எரித்ததால் மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications