எச். ராஜா, எஸ்.வி. சேகருக்கு எதிராக புதுவையில் குழந்தைகளுடன் பெண்கள் போராட்டம்
எச். ராஜா, எஸ்.வி. சேகருக்கு எதிராக புதுவையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி: சமூக வலைதளங்களில் இழிவாக கருத்துகளைப் பதிவிடும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை நடத்திய பெண்கள், குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியின் பிரதான காமராஜர் சாலையில் இன்று திடீரென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணியினர் குழந்தைகளுடன் போராட்டத்தில் குதித்தனர். எச். ராஜா, எஸ்.வி. சேகர் படங்களுக்கு செருப்படி கொடுத்து இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை குழந்தைகளுடன் கைது செய்தனர்.
இதேபோல் பல்வேறு தமிழ் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து புதுவையின் பிரதான சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications