புத்தாண்டு கொண்டாட்டங்கள்: சென்னை கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை கடற்கரை சாலைகளில் இன்று இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டு வரவை கொண்டாடுவதற்காக இன்று இரவு காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதை முன்னிட்டு, தடையில்லா வாகன போக்குவரத்து, விபத்தில்லா புத்தாண்டை உறுதிசெய்வதற்காக சென்னை போக்குவரத்து காவல் துறையினரால் கீழ்கண்டவாறு விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Chennai

காமராஜர் சாலையிலும், ராஜாஜி சாலையிலும் செய்யப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றிய விவரம்:

* கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் இன்று இரவு 8 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் தடை செய்யப்படும்.

* கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக வெளியே செல்வதற்கு இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். அதன்பிறகு கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் மட்டுமே வெளியேற்றப்படும்.

* காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரையில் இன்று இரவு 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

* காமராஜர் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்திநகர், சுங்குவார் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் சாலை தடுப்புகள் கொண்டு வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும்.

* ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பிலிருந்து போர்நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் இரவு 8 மணி முதல் என்.ஸ்.சி.போஸ் சாலை, ஈ.வே.ரா. சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக திருப்பிவிடப்படும்.

* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்து சாலை, போர்நினைவு சின்னம் ஆகியவற்றில் இருந்து வரும் வாகனங்களை காமராஜர் சாலைக்கு இரவு 8 மணி முதல் அனுமதிக்கப்படமாட்டாது. அந்த வாகனங்களை கீழே குறிப்பிட்ட வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்திக்கொள்ளலாம்.

* அடையாரில் இருந்து காந்தி சிலைநோக்கி வரும் வாகனங்கள் காரனிஸ்வரர் கோவில் தெரு- சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் காரனிஸ்வரர் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். அந்த வாகனங்கள் நடேசன் சாலை, ஐஸ் அவுஸ் சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.

* வடக்கில் இருந்து அடையாறு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கில் என்.எஸ்.சி.போஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும் அந்த வாகனங்கள் ஈ.வே.ரா. சாலை அண்ணா சாலை, வெல்லிங்டன் சாலை, ஜிபி சாலை ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ராமகிருஷ்ணா மடம் சாலை வழியாக அடையாறு செல்லலாம்.

* எந்த வாகனமும் கடற்கரை சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு அனுமதிக்கப்படமாட்டாது. அந்த வாகனங்கள் கலங்கரை விளக்கம் பின்புறம் வழியாக கடற்கரை இணைப்பு சாலையில் சென்று தெற்கு கெனால் பேங்க் சந்திப்பு வழியாக சாந்தோம் நெடுஞ்சாலையிலும், நேராக மந்தைவெளியிலும் செல்லலாம்.

* பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6-வது அவென்யூவில் இன்று இரவு 8 மணி முதல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது.

* பெசன்ட் நகர் 6-வது அவென்யூ இணைப்பு சாலைகளான 5-வது அவென்யூ, 4-வது பிரதானசாலை, 3-வது பிரதானசாலை, 16-வது குறுக்குதெரு ஆகிய பகுதிகள் தடுக்கப்படும். மகாத்மா காந்தி சாலை, 7-வது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை ஒருபுறம், ரயில்வே நிறுத்துமிடம் (எம்.ஆர்.டி.எஸ்.) சேப்பாக்கம், ரயில்வே நிறுத்துமிடம் லாயிட்ஸ் சாலை, டாக்டர் பெசன்ட் சாலையில் ஒரு புறம், லாய்ட்ஸ் சாலையில் ஒரு புறம், பெசன்ட் நகர் 4-ம் அவென்யூ ஒருபுறம், பெசன்ட் நகர் 3-வது பிரதான சாலை ஒருபுறம், பெசன்ட் நகர் 4-வது பிரதான சாலை ஒருபுறம், பெசன்ட் நகர் 5-ம் அவென்யூ ஒருபுறம், பெசன்ட் நகர் 2-ம் அவென்யூ ஒருபுறம், பெசன்ட் நகர் 3-ம் அவென்யூ ஒருபுறம்.

வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+