சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது.. டிராபிக் ராமசாமி ஹைகோர்ட்டில் முறையீடு!
சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
சென்னை: சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் பொன்.மாணிக்கவேலின் விசாரணை திருப்தியில்லை என தமிழக அரசு தெரிவித்தது.
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதி மகாதேவன் அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications