வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி வெளியேற்றம்!
சென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சென்னை ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில்இடைத்தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி காலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தார். அவரது கையில் காமிரா இருந்தது. இதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக டிராபிக் ராமசாமி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். இதனைத் தொடர்ந்து டிராபிக் ராமசாமி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, தாம் வெளியேற்றப்பட்டது நியாயமற்ற செயல் என்றார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாகவும் அவர் கூறினார்.
இடைத்தேர்தலில் போட்டியிட்டதில் இருந்தே, பரபரப்பை கிளப்பி வரும் ராமசாமி, வாக்கு எண்ணிக்கையின் போதும் பரபரப்பை ஏற்படுத்தினார். இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கும் போதுமையத்துக்குள் கேமராவுடன் ராமசாமி உள்ளே நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications