'தனி ஒருவன்' டிராபிக் ராமசாமி நலமுடன் இருக்கிறார்-திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பு
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நலத்துடன் இருக்கிறார். சினிமா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
Recommended Video

சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நலமுடன் இருக்கிறார். சென்னையில் நேற்று நடைபெற்ற இயக்குநர் அமீர் தயாரிக்கும் அச்சமில்லை அச்சமில்லை பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் டிராபிக் ராமசாமி நலமுடன் பங்கேற்றார்.
ஒற்றை மனிதராக அரசுகளை அலறவிட்டு வருபவர் டிராபிக் ராமசாமி. அரசுகளுக்கு எதிராக ஓயாத போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக டிராபிக் ராமசாமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது; உச்சகட்டமாக மனச்சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறார் என செய்திகள், வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் டிராபிக் ராமசாமி நலமுடன் இருப்பதாக கூறி தம்மோடு அமீரின் அச்சமில்லை அச்சமில்லை படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் டிராபிக் ராமசாமி கலந்து கொண்ட படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக உதயகுமார் தம்முடைய பதிவில், இயக்குனர் அமீர் தயாரிப்பில், தம்பி முத்துகோபால் இயக்கத்தில் வெளிவரவிருக்கிற அச்சமில்லை.. அச்சமில்லை" திரைப்படத்தின் பாடல் வெளியீடு அன்று வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. அய்யா டிராஃபிக் ராமசாமி, தம்பி கார்ட்டூனிஸ்ட் பாலா, தங்கை வளர்மதி, தோழர் தமிழரசனின் (1980களில் ஜாதி ஒழிப்பை மையமாக வைத்து தனித் தமிழ்நாடு கோரி ஆயுதமேந்தி போராடியது தமிழ்நாடு விடுதலைப் படை. இதன் தலைவராக இருந்தவர்தான் பொன்பரப்பி தமிழரசன்.) தாயார் பசுபதி அம்மாள், நான் ஆகியோர் கலந்துகொண்டு பேசினோம். அம்மாவும், அய்யா டிராஃபிக் ராமசாமி அவர்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications