சென்னை – மங்களூர் ரயில் விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: சென்னையில் இருந்து மங்களூர் சென்ற மங்களூர் விரைவு ரயில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் நள்ளிரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 42 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்த விவரங்களை அறிய உதவி மைய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விபத்திற்குக் காரணம்
போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினாலேயே ரயில் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல்,ரயில் தடம்புரண்ட காரணத்தினால் 800 மீட்டர் அளவுக்கு தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய மீட்புக் குழுவினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்கள் தாமதம்
மங்களூர் எக்ஸ்பிரஸ் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த ரயில்கள் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், முத்துநகர், கன்னியாகுமரி, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன.
அவசர உதவிக்கு
விபத்து குறித்த விவரங்களை அறிய உதவி மைய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்கள் பற்றி அறிய 9003864962 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். விழுப்புரம் மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்கள் பற்றித் தெரிந்து கொள்ள 9443644923 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
விபத்து குறித்த தகவல்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வழியாக செல்லக்கூடிய ரயில்கள் பற்றி அறிய 04143- 263767 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்கள் பற்றித் தெரிந்து கொள்ள 044-29015203 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நான்கு எண்களில் விபத்து பற்றிய பொதுவான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications