தண்டவாளத்தில் விரிசல்.. தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் தாமதம்.. பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக புறநகர் ரயில்கள் தாமதம்..வீடியோ
சென்னை: சிங்கப்பெருமாள் கோவில் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிங்கபெருமாள்கோயில்-காட்டாங்குளத்தூர் நடுவே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இதயைடுத்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, சிங்கபெருமாள்கோயில்-காட்டாங்குளத்தூர் இடையே குறைவான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை கடந்த காலை 6 மணி முதல் பாதிக்கப்பட்டது.
காலையிலேயே பணிக்கு செல்ல புற நகர் ரயில்களை நம்பியிருக்கும் பயணிகள் இதனால் அவதிப்பட்டனர்.












Click it and Unblock the Notifications