6 ஆண்டுகளில் 1200 முகாம்கள்... போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் ஆறுமுகம் கில்லாடியாம்!
6 ஆண்டுகளில் 1200 முகாம்களை நடத்தி மாணவர்களுக்கு பயிற்சியாளர் ஆறுமுகம் போலி சான்றிதழ்களை வழங்கியுள்ளாராம்.
Recommended Video

கோவை: கோவையில் என்எஸ்எஸ் பயிற்சி முகாமின்போது மாணவியை தள்ளிவிட்டு உயிரிழப்புக்கு காரணமான ஆறுமுகம் போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் வல்லவராம்.
கோவையை அடுத்த நரசீபுரம் விராலியூர் சாலையில் உள்ளது கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு கடந்த வியாழக்கிழமை நாட்டு நலப்பணித்திட்டத்தின் (என்எஸ்எஸ்) சார்பில் மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியின்போது தீவிபத்து ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி என்பது குறித்து என்எஸ்எஸ் பயிற்சி முகாமின் பயிற்சியாளர் ஆறுமுகம் சொல்லிக் கொடுத்தார். அப்போது கீழே விரிக்கப்பட்ட வலையில் மாணவர்கள் விழும்படி வலை விரிக்கப்பட்டிருந்தது.

மாணவி
இந்த வலையில் குதித்து மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவர்களுக்கு மத்தியில் ஒரு மாணவியான லோகேஷ்வரி மட்டும் பயமாக இருப்பதாக கூறி குதிக்க மறுத்துவிட்டார். பயிற்சியாளர் ஆறுமுகம் கட்டாயப்படுத்தியும் கேட்காததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஆறுமுகம் மாணவியை பிடித்து தள்ளிவிட்டார்.

மேல் சிகிச்சை
இதில் அலறிகொண்டே கீழே விழுந்த மாணவி முதல் மாடியில் உள்ள சன்ஷேடில் தலை மற்றும் கழுத்து பகுதி பயங்கரமாக மோதியது. இதையடுத்து அந்த வலையில் விழுந்த மாணவி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தயாரிப்பது
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பயிற்சியாளர் ஆறுமுகம் போலியானவர் என்று தெரியவந்தது. அவரை பற்றிய திடுக் தகவல்களும் கிடைத்துள்ளன. அதன்படி ஆறுமுகம் போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் வல்லவராம்.

மாணவர்களுக்கு
கடந்த 6 ஆண்டுகளில் 1200 முகாம்கள் நடத்தி போலி சான்றிதழை மாணவர்களுக்கு ஆறுமுகம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் மட்டும்தானா அல்லது இவருக்கு மேல் வேறு யாராவது உள்ளனரா என்று போலீஸார் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications