பரீட்சைதானே.. எதற்குப் பயம்.. மாணவர்களுக்கு தைரியம் கொடுத்த திறன் பயிற்சி!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு பயம் இல்லாமல் பொதுத் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி கொடுக்கப்பட்டது.

பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் இப்பயிற்சியை துவக்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியை ஜாக்குலின் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பயிற்சியாளர் வினைதீர்த்தான் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். அவர் மனிதன் வாழ்வில் முன்னேற சிறந்த சொற்களான வணங்குங்கள், வாழ்த்துங்கள், புன்னகையுங்கள் ஆகிய சொற்களை தேர்ந்தெடுத்து பேசுவது மிகவும் அவசியம் என்பதை எடுத்துக் கூறினார்.

தேவை ஏற்படும் நேரத்தில் நன்றி, மன்னிப்பு கேட்க தயங்ககூடாது போன்ற வாழ்வில் உயரும் சில வழிகளை கூறினார். மாணவர்கள் படிக்கும் போது READ, RECORD, REMEMBER, REFER, REVISE, REPEAT என்ற 6 R'S நினைவில் கொண்டு படித்தால் நன்மை சேர்க்கும் என்று கூறினார்.

காலை எழுந்தவுடன் மூச்சுப்பயிற்சி செய்யும் பழக்கத்தை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார். படித்ததை திரும்பத் திரும்ப எழுதி பார்க்க வேண்டும். அவ்வாறு செய்வதால் படித்தது நினைவில் இருக்கும் என்று கூறி மாணவர்களை தேர்வுக்கு ஊக்கப்படுத்தினார்.

பட்டதாரி ஆசிரியர் கீதா சுந்தரேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அவர்கள் செய்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications