சிக்கலான சிக்னல் கோளாறு! அரக்கோணத்தில் அவதியான 5000 பேர்! என்ன ஆச்சு தெரியுமா?
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக. எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக ரயில் பயணிகள் மட்டுமின்றி, அலுவலகத்திற்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள திருவலங்காடு ரயில்வே இணைப்பு பகுதியில் இன்று காலை ரயில் தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணத்தில் இருந்து வரவேண்டிய மின்சார ரயில்கள் அனைத்தும் திருவலங்காடு ரயில் நிலைய பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

மின்சார ரயில்கள்
இதேபோல், எதிர்முனையில் சென்னையில் இருந்து திருப்பதி செல்ல வேண்டிய ரயில்கள் மற்றும் திருத்தணி, அரக்கோணம் செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் என அனைத்து ரயில்களும் அந்தந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய ரயில் பயணிகளும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்ற அதிகாரிகளும், தொழிலாளர்களும், ரயில்களில் சிக்கித் தவித்தனர்.

கடும் அவதி
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவேண்டிய மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் அவ்வழியாக சென்ற விரைவு ரயில்களில், நடுவழியில் பயணிகளை ஏற்ற முயன்றதால், தண்டவாளத்தில் இறங்கி ரயில் பயணிகள் மாற்று ரயில்களை பிடிக்க ஓட்டம் பிடித்த சம்பங்களும் நிகழ்ந்தன.

ரயில் பயணிகள்
மேலும், இந்தப் பகுதியிலிருந்து ரயில் பயணிகள் தங்களது இடங்களுக்குச் செல்வதற்கு போதிய பேருந்து வசதிகளும் இல்லாத காரணத்தினால் ரயில் பணிகள் சுமார் 5000 பேர் கடும் அவதிக்கு ஆளாகினர். இதேபோல், குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் வராததால், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் தவிப்புடன் காத்துக்கிடந்தனர்.

நிம்மதி
இதனையடுத்து, தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு வந்த ரயில்வே பொறியாளர்கள், ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னர் சிக்னலில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ரயில் போக்குவரத்து மீண்டும் நடைபெற்றது. இதனால் ரயில் பயணிகள் நிம்மதியடைந்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications