தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக மாற்றம்.. தலைமை செயலாளரிடம் இருந்து பறந்த உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், இன்று 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர் உள்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

துத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஷா அஜித் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும்ம், விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.
*திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிறிஸ்துதாஸ் நியமனம்.
*ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜகோபால் கங்கரா நியமனம்.
*கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*தஞ்சை ஆட்சியராக தீபக்ஜேக்கப் நியமனம்.

*கடலூர் ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்.
*திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பூங்குடி நியமனம்.
*புதுகோட்டை ஆட்சியராக மெர்சி நியமனம்.
*நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்.
*நாகை ஆட்சியராக ஜான் டாம் வர்கீஸ் நியமனம்.
*அரியலூர் ஆட்சியராக அனி மேரி சுவர்ணா நியமனம்.
*காஞ்சிபுரம் ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளர்.












Click it and Unblock the Notifications