டிராபிக் விழிப்புணர்வு பிரச்சாரம்: சிக்னல்களில் நின்று பிரச்சாரம் செய்த திருநங்கைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்து சென்னை சாலைகளில் திருநங்கைகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ரோட்டரி கிளப்புடன் இணைந்து 150க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினர்.

சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள 50 சிக்னல்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாகன ஓட்டிகள் செல்போன் பேசக் கூடாது, சீட் பெல்ட் அணிய வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்த பதாகைகளுடன் நின்று பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்து விளக்கினர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏராளமான வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் கேட்டனர்.
இதுபோன்ற சமூகத்திற்கு பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருநங்கைகள் கூறினர்.












Click it and Unblock the Notifications