போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி டிச. 29-ல் வேலை நிறுத்தம்: தொ.மு.ச. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி டிசம்பர் 29-ந் தேதி முதல் நடைபெறும் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் பேருக்கான 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாததைக் கண்டித்து தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யுசி, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Transport employees to go on strike from 29th December in TN

கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் வரும் 29-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக முடிவு செய்து அறிவித்தனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்துக்கான விளக்க கூட்டம் பல்லவன் இல்லத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு தொமுச பொருளாளர் கி.நடராஜன் தலைமை தாங்கினார். இதில் தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக் கணக்கான போக்குவரத்து தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும், அதற்கான பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும், 20 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 29-ம் முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளோம்.

திடீரென நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இது வெறும் கண்துடைப்புதான். உரிய முறையில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவுள்ளோம்.

இவ்வாறு சண்முகம் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+