மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்: திருச்சியில் கணவர் விநோத புகார்
திருச்சி: கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயமாகிவிட்டதாக கணவர் ஒருவர் திருச்சி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். எத்தனையோ விநோதமான வழக்குகளை சந்தித்துள்ள திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீசார் இந்த புகாரைப் பார்த்த உடன் தலைசுற்றித்தான் போயினர்.
இந்த பரபரப்பு புகாரை கொடுத்த நபரின் பெயர் கஜேந்திரன் என்பதாகும். இவர் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கஜேந்திரனுக்கும் அவரது உறவினரான கீழகல்கண்டார்கோட்டை அம்பேத்கர் நகர் பொன்னன் மகள் சங்கீதாவுக்கும் கடந்தாண்டு செப்டம்பர் 17ம்தேதி திருமணம் நடைபெற்றது. சில நாட்களிலேயே சங்கீதா கர்ப்பமடைந்ததாக கூறி இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆலோசனை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நடத்தி தாய் வீடான அம்பேத்கர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில்தான் புதன்கிழமையன்று கஜேந்திரன் பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில், தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை. அதை கண்டுபிடித்து தருமாறு விசித்திரமான புகார் ஒன்றை கொடுத்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சங்கீதா கருவுற்றார். கடந்த ஜூலை 5ம்தேதி வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வளைகாப்புக்கு வந்த கஜேந்திரன் தூத்துக்குடி சென்று விட்டார். போனில் நலம் விசாரித்தபோது பிரசவ தேதி ஆகஸ்ட் 9ம்தேதி என டாக்டர்கள் கூறியதாக சங்கீதா தெரிவித்துள்ளார்.
பிரசவ தேதியன்று கணவருக்கு போன் செய்து பிரசவம் 9ம்தேதியில்லை என்றும், குழந்தை பிறப்பது ஆடி மாதம் என்பதால் ஆவணி மாதத்தில் ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கஜேந்திரன் திருச்சி வந்து மனைவியை பலமுறை ஸ்கேன் செய்ய அழைத்தும் மறுத்துள்ளார்.
கிராம முக்கியஸ்தர்களின் சமரசத்திற்கு பிறகு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது சங்கீதா வயிற்றில் குழந்தை இல்லை என அறிக்கை வரவே அதிர்ச்சியடைந்த கஜேந்திரன் பொன்மலை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பொன்மலை மகளிர் இன்ஸ்பெக்டர் மரகதம் நடத்திய விசாரணையில், சங்கீதா இபி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கான சிறப்பு சிகிச்சை பெறாமல் ஓபி அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. மேலும் குழந்தை இறந்தே பிறந்தது, பெண் குழந்தை என்பதால் வீட்டின் அருகில் உள்ளவரிடம் கொடுத்து விட்டோம், கழிப்பறைக்கு செல்லும்போது விழுந்து விட்டது, வளைகாப்பிற்கு பிறகு கரு கலைந்துவிட்டது என சங்கீதா மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். உண்மையாகவே சங்கீதா கர்ப்பமாக இருந்தாரா என்பதே சந்தேகம் எழுந்துள்ளது.
வடிவேலு கிணற்றை காணோம் என்கிற கதையாக இப்போது வயிற்றில் இருந்த குழந்தையைக் காணோம் என்று புகார் அளித்துள்ளது திருச்சி பொன்மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications