திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்: இளைஞரணி கூட்டத்தில் வாசன் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை : திருச்சி பொதுக்கூட்டம் திருப்பு முனையாக அமையும் என்று இளைஞரணி கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.
காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளார் ஜி.கே.வாசன். திருச்சியில் மாநாடு நடத்தி கட்சி பெயரையும், கொடியையும் அதில் அறிவிக்க உள்ளார். முன்னதாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் ஜி.கே.வாசன் இன்று பேசினார்.

அவர் கூறுகையில், "நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். உங்களுக்கு வழிகாட்டியாகவும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் இருப்பேன். இளைஞர்கள் பேச்சிலும் செயலிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். திருச்சி பொதுக் கூட்டம் திருப்புமுனையாக அமையப்போகிறது. மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்" என தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications
