குமாரு கொஞ்சம் சுமாருதான்... சொத்து விஷயத்தில் அதிமுக வேட்பாளரை ஓவர் டேக் செய்த திமுக!
திருச்சி: திருசசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் குமாரை விட திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும் திருச்சி தொகுதியின் நடப்பு உறுப்பினர் குமார்தான். ஆனால் எம்.பியை விட எதிர்க் கட்சி வேட்பாளருககு நிறைய சொத்துக்கள் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
திருச்சி திமுக வேட்பாளர் அன்பழகன் சொத்துக்களை முதலில் பார்ப்போம்... அவர் கொடுத்த தகவல் அப்படியே...

இமெயில் கிடையாது
எனக்கு, சித்ரா என்ற மனைவி, மகள்கள் சரண்யா, ரக்ஷனா உள்ளனர். இ-மெயில் முகவரி, சமூக வலைதளம் கணக்கு இல்லை. வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம், ரூ.9,26,738, சித்ராவுக்கு, ரூ.17,524.

கையிருப்பு இதுதான்
என் பெயரில் கையிருப்பு ரொக்கமாக ரூ.3,21,650. மனைவி சித்ரா பெயரில், ரூ.2,11,107. அன்பழகனுக்கு வங்கி கணக்கில், ரூ.23,930.30. சித்ராவுக்கு, ரூ.470.97. சரண்யாவுக்கு, ரூ.6,000 வங்கியில் உள்ளது.

பாலிசி வகையில்
அன்பழகனுக்கு, எல்.ஐ.சி., பாலிசி, ரூ.31 லட்சம், சித்ராவுக்கு, பல்வேறு நிறுவனங்களில், ரூ.28,49,999 மதிப்பு பாலிசி உள்ளது. சரண்யா, ரக்ஷனாவுக்கு தலா, ரூ. ஒரு லட்சம் எல்.ஐ.சி., பாலிசி உள்ளது.

கடன் இது
அன்பழகனுக்கு கடனாக, ரூ.4,24,754, சித்ராவுக்கு, ரூ.50,445 உள்ளது. அன்பழகனுக்கு, ரூ.2.5 லட்சம் மதிப்பில், 100 கிராம், சித்ராவுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில், 825 கிராம், சரண்யாவுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பில், 40 கிராம் தங்கம் உள்ளது.

அசையும் சொத்து
அன்பழகனுக்கு, ரூ.10,20,334.30, சித்ராவுக்கு, ரூ.23,61,022.97, சரண்யாவுக்கு, ரூ.1,06,000, மொத்தம், 34 லட்சத்து 87 ஆயிரத்து 357 ரூபாய், 27 பைசா அசையும் சொத்து (பாலிசி நீங்கலாக) உள்ளது.

அசையாத சொத்துக்கள்
அன்பழகனுக்கு, ரூ.3.06 கோடி (சந்தை) மதிப்பில், 5,268 சதுரஅடியில் கே.கே.,நகரில் வணிகக்கட்டிடம் உள்ளது. மேலபுதூரில், ரூ.21 லட்சம் (சந்தை) மதிப்பில், 736.25 சதுரஅடியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. சித்ரா பெயரில், கே.கே.,நகரில் ரூ.58.80 லட்சம் (சந்தை) மதிப்பில், 3,920 சதுரஅடியில் வீடு உள்ளது. அன்பழகனுக்கு, ரூ.3.21 கோடி, சித்ராவுக்கு, ரூ.58.80 லட்சம் அசையும் சொத்து உள்ளது. அன்பழகன் பெயரில், ரூ.42,63,360 லட்சம், சித்ராவுக்கு, ரூ.87,00,688 கடன் உள்ளது. அன்பழகனுக்கு, 3.21 கோடி, சித்ராவுக்கு, ரூ.58.80 லட்சம் என, 3 கோடியே, 79 லட்சத்து 80 ஆயிரம் அசையா சொத்து உள்ளது.

11 வழக்குகள்
மொத்தம், 11 வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் விசாரிக்க தடை உத்தரவு உளளது. கையில் வாகனம் என்று எதுவும இல்லை.

குமாருக்கு இவ்வளவு இல்லை
அதிமுக வேட்பாளரான எம்.பி. குமாருக்கு இருக்கும் சொத்து பத்தை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications