நான் செய்த தவறை இனி யாரும் செய்யாதீர்கள்: கண்கலங்கிய திருச்சி சிவா
சென்னை: திமுக எம்.பி. திருச்சி சிவா மரணம் அடைந்த தனது மனைவியை நினைத்து அழுக அதை பார்த்து அவருக்கு ஆறுதல் கூறச் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் கண்கலங்கினார்.
திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி மார்பக புற்றுநோயால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி திருச்சி சிவாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது நாராயணசாமியிடம் சிவா கூறுகையில்,

பலம்
என் காதல் மனைவி இறப்பதற்கு முந்தையநாள் நான் அவளிடம் நீ தான் என் பலம் என்று கூறியதற்கு மெல்ல சிரித்தாள்.

தவறு
என் வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் நீ தான் என்று மனைவியிடம் கூற தவறிவிடுகிறோம். நானும் அந்த தவறை செய்ததை தற்போது தான் உணர்கிறேன்.

நீங்களும்
நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். மனதில் உள்ளதை மனைவியிடம் தெரிவித்துவிடுங்கள் என்று என்னை பார்க்க வருபவர்களிடம் இனி கூறுவேன்.

கஷ்ட காலத்தில்
நான் கஷ்டப்பட்ட காலத்தில் வெறும் மஞ்சள் கயிற்றோடு குடும்ப கஷ்டம் யாருக்கும் தெரியாதவாறு சிரித்த முகத்தோடு இருந்தாள். போராட்டத்திற்கு சென்றால் திலகம் வைத்துவிட்டாள். பொதுக் கூட்டத்தில் இருந்து வீடு திரும்பினாள் சிரித்த முகத்தோடு வரவேற்றாள். அவள் கோபப்பட்டு நான் பார்த்ததே கிடையாது.

சம்சாரம்
இனி வீட்டின் மாடியில் நானும், கீழ் மகனும் இருப்பான். எவ்வளவு நேரம் தான் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க முடியும். சம்சாரம் போனால் சகலமும் போச்சு என்று கூறி சிவா கண்கலங்கினார்.

நாராயணசாமி
சிவா கண்கலங்கியதை பார்த்த நாராயணசாமி தனது மனைவி விபத்தில் பலியானது பற்றி கூறி அவரும் கண்கலங்கினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications