துப்பாக்கி சூடு கேள்விய அப்புறம் கேளுங்க.. மும்மொழி கொள்கைதான் அவசியம்.. நிர்மலா சீதாராமன் திமிர்
மீனவர் மீதான துப்பாக்கி சூடு, பிரிட்ஜோ மரணம் குறித்த கேள்வியை அப்புறம் கேளுங்க என்று சொல்லி விட்டு மும்மொழிக் கொள்கை தொடர்பாக மூச்சுபிடிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிவிட்டுச் சென்றார்.
சென்னை: கணிதம், அறிவியலை படித்துவிட்டு தாய்மொழியைக் கூட படிப்பதில்லை என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மொழிகளைப் படிப்பதால் மனித வளர்ச்சி, கலாச்சாரம் எல்லாம் நன்றாக வளரும். மும்மொழி கொள்கை அறிவிக்கப்பட்ட உடன் அது சமஸ்கிருத திணிப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. அதன் உண்மையான நோக்கம் அது இல்லை. மும்மொழி கொள்கை என்றுதான் சொல்கிறோமே ஒழிய அதில் சமஸ்கிருதம் வேண்டும் என்று நாங்கள் சொல்ல வில்லை.

பாஜக பிறப்பதற்கு முன்பிருந்தே மும்மொழிக் கொள்கை பற்றி இந்தியாவில் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மும்மொழி படிப்பதால் நிறைய மொழிகளை படிக்கலாம். மொழியை நிறைய படிக்க படிக்க பிள்ளைகளின் பேசும் திறன் அதிகரிக்கும். பல மொழிகளை கற்பதால் நாட்டை நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும்.
மும்மொழி கொள்கையை ஏற்காத பல மாநிலங்கள் உள்ளன. நான் தமிழ்நாட்டை பற்றி மட்டும் சொல்ல வில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க முயன்றார். அதனை பாதியில் தடுத்து நிறுத்திய நிர்மலா சீதாராமன், இந்த கேள்வியை அப்புறம் கேளுங்க என்று சொல்லிவிட்டு, மீண்டும் மும்மொழிக் கொள்கை தொடர்பான கேள்வியை கேட்க வைத்து பதில் அளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications