பிரதமர் மோடியை முதுமலைக்கே போக தூண்டிய பொம்மன் - பெள்ளியின் தாய் பாசம்.. உருக்கமான பின்னணி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை செல்கிறார். அங்கு ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து பாராட்டி கவுரவிக்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை மைசூர் செல்லும் அவர், நாளை காலை முதுமலைக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு யானைகள் பராமரிக்கும் முறைகள், அதற்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். பின்னர் பாகன்களிடம் கலந்துரையாடுகிறார்.

True elephant story: bomman and billie s motherly love that made PM Modi resilient

தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார். மேலும் படத்தில் இடம் பெற்ற ரகு, பொம்மி குட்டி யானைகளை பார்வையிடுகிறார். பின்னர் முதுமலை வனத்தில் புலிகளின் பாதுகாப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து அங்கிருந்து மசினகுடி இறங்கு தரைத்தளத்தில் தயார் நிலையில் வைக்கப்படும் ஹெலிகாப்டர் மூலமாக மைசூரு செல்ல உள்ளார். பிரதமர் வருகையையொட்டி முதுமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு

இந்த நிலையில், பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளதால், பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆஸ்கர் விருது

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி எப்படி பராமரித்தனர் என்பதை மையமாகக் கொண்டதுதான் தி எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம். அதில் யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் காட்சிகள் தான் படத்தின் உயிரே.இந்த படத்திற்கு தான் ஆஸ்கர் விருது கிடைத்தது-

True elephant story: bomman and billie s motherly love that made PM Modi resilient

யானை ரகு

தாயை பிரிந்த யானை ரகுவை பற்றி பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொம்மன், ''முதலில் எங்களிடம் யானை குட்டி வந்தபோது மோசமாக காயமடைந்த நிலையில் இருந்தது. மருத்துவர்கள், அதிகாரிகள் எங்களிடம் யானையை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என விளக்கினார்கள். எங்கள் குடும்ப உறுப்பினராகத்தான் ரகுவை பார்த்தோம். நாங்கள் டீ குடித்தால், ரகுவுக்கு ஒரு டப்பாவில் பாலை ஊற்றிக் கொடுப்போம். எங்களில் ஒருவராக யானை குட்டி வளர்ந்ததால், எங்கள் பேரன், பேத்திகள் எங்களை பார்க்க வரும்போது, யானைக் குட்டி அவர்களுடன் விளையாடும் என்றார். பெள்ளி கூறும் போது, நாங்கள் யானையை எப்படி பராமரிக்கிறோம் என்று அவ்வப்போது வந்து படம் எடுப்பார்கள், அதுதான் படமாக வரப்போகிறது, அந்த படத்திற்கு விருது கிடைக்கப்போகிறது என்று அப்போது தெரியாது. இந்த படம் ஆஸ்கர் விருது பெற்ற பின்னர், எங்களை போன்ற யானை பராமரிப்பாளர்களின் வாழ்க்கையைப் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

தமிழக அரசு கௌரவரம்

ஆஸ்கர் விருது பெற்றதையடுத்து, பொம்மன், பெள்ளியை தமிழக அரசு கெளரவித்ததுடன், முதுமலை மற்றும் தெப்பக்காடு யானை காப்பகத்தில் உள்ள 91 பணியாளர்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் யானை பராமரிப்பாளர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு ரூ. 9.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு நேரில் அழைத்தும் பொம்மன் பொள்ளியை பாராட்டினார்.

True elephant story: bomman and billie s motherly love that made PM Modi resilient

மோடி என்ன பேசுவார்

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும் பொம்மன் பெள்ளியை நேரில் அழைத்து அண்மையில் டெல்லியில் பாராட்டினார். இந்நிலையில் முதுமலைக்கே சென்று யானைகளின் வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றி, யானை பாகனங்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பது பற்றியும் நேரில் கேட்டு அறிய உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. நாளை பிரதமர் நரேந்திர மோடி பொம்மன் பெள்ளியிடம் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+